அசாமில் பரபரப்பு.! பட்டாக்கத்தியுடன் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் பட்டாக்கத்தியுடன் தலைமையாசிரியர் பள்ளிக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலம் சில்சார் மாவட்டம் தாராப்பூர் பகுதியை சேர்ந்தவர் திரிதிமேதா தாஸ் (38). இவர் சச்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் 11 ஆண்டுகளாக அந்த பள்ளியில் வேலை பார்த்து வரும் அவர், பள்ளிக்கு பட்டாக்கத்தியுடன் கோபத்தில் வந்துள்ளார். இதைப்பார்த்தவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து பள்ளிக்கு விரைந்து வந்த போலீசார் தலைமை ஆசிரியரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், மற்ற ஆசிரியர்களின் முறைகேடுகளால் கோபம் மற்றும் விரக்தி அடைந்ததாகவும், கத்தியைக் காட்டி அவர்களை எச்சரிக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கைவசம் இருந்து சில குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதில், தனக்கு சில ஆசிரியர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், 3 ஆசிரியர்களை தான் கொலை செய்யப் போவதாகவ எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து ஆசிரியர் பட்டாக்கத்தியுடன் பள்ளிக்கு வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அவரை கல்வித்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

headmaster came to the school with a machete was suspend in Assam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->