வெப்ப அலை எதிரொலி : 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலம், தலைநகர் கவுகாத்தி, கச்சார், பார்பேடா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு  பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளதோடு, தொடர்ந்து அங்கு வெப்ப அலை வீசுவதன் காரணமாக பொது  மக்கள் மதிய நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.


வானிலை ஆய்வு மையம் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கவுகாத்தி உள்ளிட்ட நகர பகுதிகள் மற்றும் காம்ரூப் மாவட்டத்தில் வெயில் தாக்கம் காரணமாக தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக அதிக வெப்பம் மற்றும் நீரிழப்பு காரணமாக மாணவர்கள் உடல்நலக்குறைவு மற்றும் மயக்கம் என  பல்வேறு சம்பவங்கள் குறித்து  பள்ளிகளின் நிறுவனங்கள் அறிக்கை சமரிப்பித்ததை அடுத்து, தற்போது இந்த நடவடிக்கை அங்கு எடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heat wave echo 4 days off for schools


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->