சூடு பிடித்த ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்!.....இன்று சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கும் ராகுல் காந்தி!
Heated Jammu and Kashmir assembly elections Rahul Gandhi to start whirlwind campaign today
ஜம்மு-காஷ்மீரில் இந்த மாதம் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக வரும் செப்டம்பர் 18ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ம் தேதி வரை என 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.
மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாடு கட்சிகள் இடையேயான கூட்டணி உறுதியாகி உள்ளது. இருந்த போதிலும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.
தொடர்ந்து பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் ஆகியோர் முயற்சித்தனர்.
அதன்படி, மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடுகின்றன. அதேநேரத்தில் 5 தொகுதிகளில் இரு கட்சிகளும் தனித்து களமிறங்குகின்றன
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். டெல்லியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் செல்லும் ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் விகார் ரசூல் வாணிக்காக பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள டூரு பகுதிக்குச் சென்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் மந்திரி குலாம் அகமது மிர்-ஐ ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். ராகுல் காந்தியை வருகையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
English Summary
Heated Jammu and Kashmir assembly elections Rahul Gandhi to start whirlwind campaign today