வடமாநிலங்களையே உலுக்கி எடுக்கும் பனிமூட்டம் -  மூன்று பேர் பலி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள வடமாநிலங்களான டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, இமாசலபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. 

இந்த பனிபொழிவால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என்று அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் விபத்துகளும் ஏற்படுகின்றது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்சார் மாவட்டம் குர்ஜா பகுதியில் சென்ற லாரி ஒன்றின் டயர் திடீரென பஞ்சர் ஆனதால் நிலை தடுமாறி  லாரி கவிழ்ந்தது. 

அந்த லாரியின் மீது, பின்னால் வந்த பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து, காஷாம்பி மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற இரண்டு வாலிபர்கள் நின்றுகொண்டிருந்த ஒரு லாரி மீது மோதியதில்
ஒருவர் பலியானார். மற்றொருவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

ஹர்தோய் மாவட்டத்தில் சாலையில் சென்ற ஒரு பொக்லிங் எந்திரம் திடீரென திரும்பியது. அப்போது பின்னால் வந்த ஒரு பள்ளிவாகனம் அதன் மீது மோதியதில் வேன் ஓட்டுனரும், வாகனத்தின் உள்ளே இருந்த மாணவர்கள் ஏழு பேரும் காயமடைந்தனர். 

இதைத் தொடர்ந்து பாரபங்கி மாவட்டத்தில் பனிமூட்டம் காரணமாக, சாலையில் நின்ற லாரி மீது வேகமாக வந்த ஒரு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. 
அதில் ஏழு பேர் காயமடைந்தனர். 

மேலும், சீதாப்பூர் மாவட்டத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஒரு லாரியின் மீது பின்னால் வந்த வேன் மோதியதில் வேனில் பயணம் செய்த எட்டு பேர் காயமடைந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy accident in north states for snowfall


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->