கர்நாடகாவில் 'ரெஸ்ட்' எடுத்துப் பெய்யும் கனமழை - சாலைகளில் ஓடும் வெள்ளத்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் பெங்களூரு..!! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் நேற்று காலை முதல் பெய்து வரும் இடைவிடாத கனமழையால் சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை நின்றிருந்த நிலையில், நேற்று காலை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாத மழை பெய்து வருகிறது. 

குறிப்பாக ராஜராஜேஸ்வரி நகர், அரண்மனை நகர், கெங்கேரி, வசந்தபுரா, ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாத கனமழை கொட்டியது. குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதையடுத்து தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் குடகு மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்நிலையில் நேற்று மதியம் முதல் பெங்களூரிலும் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதில் பெங்களூரூ நகரின் பல்வேறு பகுதிகளில்  3 செ. மீ வரை மழை பதிவாகியுள்ளது. இதனால் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியது. இதனால் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் பெங்களூரு மாநகரம் முழுவதும் நேற்று மதியம் முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy Rain in Karnataka Flooded In Roads


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->