கனமழை எதிரொலி : ஆந்திராவில் இன்று 5 வது நாளாக ரயில் சேவை ரத்து! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கனமழை காரணமாக, விஜயவாடா – கூடூர் தடம், காஜிபேட் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்  ரயில் பாதைகள் மூழ்கி, சேதமடைந்துள்ளன. சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஆந்திரா வழியாக செல்லும் புதுடில்லி, பனாரஸ், அகமதாபாத், புவனேஸ்வர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் நேற்று முன்தினம் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், 4-வது நாளாக நேற்றும் சேவை பாதிக்கப்பட்டது. தாம்பரம் - சந்திரகாச்சிக்கு இன்று  காலை 7.15 மணிக்கு புறப்பட இருந்த அந்த்யோதயா விரைவு ரயில், புதுடெல்லி - சென்னை சென்ட்ரலுக்கு இன்று புறப்பட இருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் சென்னை சென்ட்ரல் - ஜெய்பூருக்கு நேற்று புறப்பட்ட அதிவிரைவு ரயில் (12967), ரேணிகுண்டா, குண்டக்கல் வழியாக திருப்பி விடப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட்ட விரைவு ரயில்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட நிலையில், மொத்தம் 18 ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாக  தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain reverberates Train service canceled in Andhra Pradesh for the 5th day today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->