3 மாநிலங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... ''ரெட் அலர்ட்'' - வானிலை ஆய்வு மையம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா, கோவா, கேரளா மாநிலங்களின் ஒரு சில பகுதிகளில் இன்று மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராய்கார்ட் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கையும் மும்பை, தானே, பால்கர், ரத்தினகிரி, புனே மற்றும் மகாராஷ்டிராவின் தொல்காப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கையும் விதிக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தில் மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா தெற்கு உள் மற்றும் கடலோர பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று பெய்த கன மழை காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி என்.சி.ஆர். பகுதிகளில் அடுத்த ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rains 3 states Red Alert


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->