மகாராஷ்டிரா : இருசக்கர வாகன சவாரியை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.!
high court order to bike taxi service stop in maharastra
நாட்டின் பல இடங்களில் இரு சக்கர வாகன சவாரி (பைக் டாக்சி) வசதி உள்ளது. அதற்கு சம்பந்தப்பட்ட செயலி மூலம் அதனை அழைத்தால் அடுத்து பத்து நிமிடங்களில் நமது முன்னாடி இருசக்கர வாகனங்கள் வந்து நிற்கும்.
இந்த பைக் டாக்சி நிறுவனங்கள் பெரும்பாலும் அரசின் உரிமம் இல்லாமலேயே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்துக்கு உரிமம் வழங்க முடியாது என்று கடந்த மாதம் மாநில அரசு தெரிவித்தது.
இதை எதிர்த்து, ரேபிடோ பைக் டாக்சி நிறுவனம் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இந்த மனு மீதான விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கவுதம் பட்டேல், எஸ்.ஜி. திகே உள்ளிட்டோர் அடங்கிய அமர்வின் முன்பு நடைபெற்றது.
அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெனரல் பிரேந்திர சரப், "உரிமம் இல்லாமல் இயங்கும் பைக் டாக்சி சேவையை நிறுத்திய பிறகு தான் மனு மீதான விசாரணையை தொடர வேண்டும்,"என்றுத் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் உரிமம் இன்ல்லாமல் பைக் டாக்சியை இயக்குவதற்கு ரேபிடோ நிறுவனத்த்திற்கு தற்காலிக தடை விதித்தனர். இந்தத் தடையை மீறி பைக் டாக்சிகளை இயக்கினால் நிரந்தரமாக உரிமம் வழங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
இதை கேட்ட பைக் டாக்சி நிறுவனம் வருகிற 20-ந் தேதி வரை சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உறுதி அளித்தது. இதைத் தொடர்ந்து மனு மீதான விசாரணை வருகிற 20-ந் தேதி நடைபெறவுள்ளது.
English Summary
high court order to bike taxi service stop in maharastra