ஹிஜாப் விவகாரம்: பல்டி அடித்த கர்நாடக முதல்வர்! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் போன்ற மத அடையாள ஆடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. 

இந்த தடையை நீக்குவோம் என, முதல் மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் மைசூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். 

இதற்கு பா. ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவர், அரசு ஹிஜாப் தடை உத்தரவை திரும்ப பெறுவது தொடர்பாக இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. ஒருவர் என்னிடம் ஹிஜாப் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். 

அதற்கு நான் ஹிஜாப் தடையை நீக்குவோம் என்றேன். ஹிஜாப் தடை உத்தரவு நீக்குவதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளதால்  உடனடியாக தடையை நீக்க முடியாது. 

அமைச்சரவையில் கலந்தாலோசித்து விரைவில் நல்ல முடிவு எடுப்பேன் என தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சித்தராமையா தனிமனித உடை, உணவு விஷயத்தில் கட்டுப்பாடு விதிக்கக்கூடாது. 

ஹிஜாப் தடையை நீக்குவோம் என பேசிய நிலையில் அரசு மட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என திடீரென பல்டி அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hijab Issue Karnataka Chief Minister revocation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->