ஹிஜாப் தடை - தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில், கல்வி நிறுவனங்களில் வகுப்பறைக்குள் இஸ்லாமிய மாணவிகள் புர்கா அணிந்து வறுவதற்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவை விசாரணை செய்த கர்நாடக உயர்நீதிமன்றம் புர்கா அணிவது இஸ்லாமிய சமுதாயத்தில் கட்டாயம் இல்லை என்றும் கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் உத்தவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்க்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணைகள் நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன் ஒருவாரத்திற்கும் மேலாக நடைபெற்றது. 

அந்த விசாரணையில் கர்நாடக அரசு மற்றும் இஸ்லாமிய மாணவிகள் தரப்பு வழக்கறிஞர்கள் பல பரபரப்பு வாதங்களை முன்வைத்தனர். இந்த வழக்கில் வாதங்கள் நிறைவு அடைந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hijap ban supreme court reserves judgement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->