உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தின் உயிர் - உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு..! - Seithipunal
Seithipunal


உள்ளூர் மொழிகளை வலுப்படுத்த வேண்டும் என்றல் இந்திய மக்கள் தங்கள் தாய்மொழியைக் கற்கவும் புரிந்துகொள்ளவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். இந்தி மொழி தினவிழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று உரையாற்றினார். 

அப்போது உரையாற்றிய அவர், "இந்தி அனைத்து இந்திய மொழிகளின் நண்பன் என்றும், அது ஒட்டுமொத்த தேசத்தை ஒரு அலுவல் மொழியாக ஒன்றிணைப்பதாகவும்" தெரிவித்தார்.  மேலும், தொடர்ந்து பேசிய அவர், "உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தின் உயிர். நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டுமானால், நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியைக் கற்க வேண்டும். 

இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நமது உள்ளூர் மொழிகளை வலுப்படுத்த வேண்டும். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மொழிகளின் தாழ்வு மனப்பான்மையை நமது அதிகாரப்பூர்வ மொழியும் உள்ளூர் மொழிகளும் சேர்ந்து வேரோடு பிடுங்கி எறியும். அதற்கான நேரம் வந்துவிட்டது". என்று அமித் ஷா தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hindi language day function amith sha speak


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->