இந்தியாவை காப்பாற்ற இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.. சாமியார் சர்ச்சை பேச்சு.!
Hindus should have more children to save India
இந்தியாவை காப்பாற்ற இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என சாமியார் வருவது பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக சாமியார்கள் சிலர் பேசுவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அந்தவகையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாமியார் எதி சத்யதேவானந்த் "இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்க இந்துக்கள் ஏராளமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தியா இந்து பூமியாக இருக்கும்" என பேசியுள்ளார்.
தற்போது இவர் பேசியதற்கு பலரும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து விளக்கம் அளிக்ககோரி சாமியார் சத்யதேவானந்துக்கு இமாச்சலப் பிரதேச போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
English Summary
Hindus should have more children to save India