ராமர் கோவில் கும்பாபிஷேகம் - பங்குச் சந்தை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் வரும் 22-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22-ந்தேதியன்று மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், வருகிற 22-ந்தேதியன்று பங்குச் சந்தைகள் அனைத்தும் காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை ஐந்து மணிவரை செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த விடுமுறையால் இன்று பங்குச் சந்தைகள் காலை 9.15 மணி முதல் 3.30 மணி வரை செயல்படும் என்றும், நிலுவையில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளின் தீர்வும் வரும் 22-ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

holiday to Stock Market Companies for ramar temple kumbabishegam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->