ஓரினச் சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ அனுமதி.. கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஓரினச் சேர்க்கையாளர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கேரளா மாநிலம் ஆலுவா பகுதியை சேர்ந்த ஆதிலா, கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பாத்திமா நூரா ஆகியோரின் குடும்பத்தினர் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இதனையடுத்து தோழிகள் இருவரும் சவுதி அரேபியா ஒன்றாக படிக்கச் சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இருவரும் லிவிங் டு கெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இது குறித்து அறிந்த இருவரது பெற்றோர்களின் குடும்பமும் அவர்களைப் பிரித்து வைத்துள்ளது. பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தொண்டு நிறுவனம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த பாத்திமாவின் உறவினர்கள் அவரை கடத்தி சென்றனர். இதுகுறித்து ஆதிலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து ஆதிலா கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆதிலாவும், பாத்திமா நூராவும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Homosexuals allowed to live together Kerala High Court order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->