கஞ்சா விற்ற ஓட்டல் ஊழியர் கைது! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


குறைந்த விலைக்கு ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி கொண்டு வந்து பெங்களூரு, தட்சிண கன்னடாவில் விற்று வந்து ஊழியர் கைது. கைதான பத்ருத்தீன் மீது பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு பானசவாடியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஒருவரை பிடித்து கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கஞ்சா விற்பனை செய்த நபர் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரை சேர்ந்த பத்ருத்தீன் என்பது தெரிய வந்தது.

இவர், ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.இவரது குடும்பம் ஏழ்மையில் இருந்துள்ளது. இதனால் எளிதில் பணம் அதிகமாக சம்பாதிக்க அவர் ஆசைப்பட்டுள்ளார். மேலும் பத்ருத்தீனுக்கு உடன் பிறந்த ஒரு சகோதரியும் உள்ளார். சகோதரி திருமணத்தை நடத்துவதற்கும் இவருக்கு பணம் தேவைப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறைந்த விலையில் கஞ்சாவை ஒடிசாவில் இருந்து வாங்கி கொண்டு வந்து பெங்களூரு, தட்சிண கன்னடாவில் அவர் விற்பனை செய்து வந்துள்ளார். அதன்படி, அவர் கஞ்சாவை ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கடத்தி வந்துள்ளார் என தெரியவந்தது. 

பானசவாடி போலீசார் பையப்பனஹள்ளியில் உள்ள எஸ்.எம்.வி.டி. ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பத்ருத்தீன், அவர் வாங்கி கொண்டு வந்த கஞ்சாவுடன் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலீசார் ரூ.1 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், பானசவாடி போலீசார் பத்ருத்தீன் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திய பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hotel employee arrested for selling ganja Police investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->