கேரளாவில் மது விற்பனை.! ஒரே நாளில் 107 கோடியைத் தாண்டி சாதனை.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் புத்தாண்டையொட்டி, ஒரே நாளில், 107 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. 

கேரள மாநிலம் முழுவதும் அரசுக்கு சொந்தமான 268 மதுபானக் கடைகள் உள்ளன. இதில் திருவனந்தபுரத்தில் பவர் ஹவுஸ் சாலையில் அமைந்துள்ள மதுக்கடையில் மட்டும் ஒரு கோடியே பதின்மூன்று லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில், கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 95 கோடியே 67 லட்சம் ரூபாயாக இருந்த மது விற்பனை, இந்த ஆண்டு, 107 கோடியே 14 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. 

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக டிசம்பர் 22 முதல் 31 வரையிலான பத்து நாட்கள் நடைபெற்ற மது விற்பனையில், 686 கோடியே 28 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு 649 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hundrad and seven crores liquar sale in kerala


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->