நகர்ப்புற மக்களுக்கு கிடைத்த அதிரடி ஆஃபர்....அசத்திய ராஜஸ்தான் அரசு..!  - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாவட்டத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த செப்.9ம் தேதி, மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை போன்று, இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தினை அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் துவங்கி வைத்தார். 

இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு திட்டங்கள், பாரம்பரிய நினைவுச்சின்னங்கள், பூங்கா பராமரிப்பு, சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்றுதல், பேனர்கள் அகற்றுதல் போன்ற பணிகள் வழங்கப்படுகிறது. 

இத்திட்டத்தில், 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் சேர தகுதியுடையவர்கள் ஆவர். இதில் பயிற்சி இல்லாத தொழிலாளருக்கு நாளொன்றுக்கு ரூ.259, திறன்வாய்ந்த தொழிலாளருக்கு நாளொன்றுக்கு ரூ.283 கூலியாக வழங்கப்படுகிறது. 

மேலும், இந்த வேலைக்கான சம்பளம் நேரடியாக தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு, குறிப்பிட்ட இடைவெளியில் செலுத்தப்படும். இதற்காக ராஜஸ்தான் அரசு, பட்ஜெட்டில் ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hundred days employment for rajastan people


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->