செல்போன் பேசிக்கொண்டு சாப்பாடு போட மறுத்த மனைவி - ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டம் அம்பிளிகொளா பகுதியை சேர்ந்தவர் மனு - கவுரம்மா தம்பதியினர். இவர்களில், கவுரம்மா சிகாரிப்புராவில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மனு அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், மனு நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் தனது மனைவியிடம் உணவு பரிமாறும்படி கேட்டுள்ளார்.

ஆனால் கவுரம்மா நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நீங்களே உணவு பரிமாறி சாப்பிட்டு கொள்ளுங்கள் என்று கவுரம்மா கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனு, மனைவி கவுரம்மாவிடம் தகராறில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் தகராறு முற்றியதால் கடும் கோபமடைந்த மனு, மனைவியின் கழுத்தை நெரித்து உள்ளார். 

இதில் கவுரம்மா மூச்சு திணறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கணவர் மனு, மனைவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு உங்களது மகள் எனக்கு உணவு பரிமாறாமல் செல்போனில் மூழ்கி இருந்தார். இதனால் ஆத்திரத்தில் கவுரம்மாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கவுரம்மாவின் பெற்றோர் சிகாரிப்புரா போலீசில் புகார் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து கவுரம்மாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மனுவை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband kill wife in karnataga


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->