ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்.! சிக்கன் வறுவலில் விஷம் கலந்து மனைவி கொலை..! கணவரின் வெறிச்செயல்...! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலத்தில் சிக்கன் வறுவலில் விஷம் கலந்து கொடுத்து மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தை சேர்ந்தவர் அனுமந்தராவ். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அனுமந்தராவ் பீரோவில் வைத்திருந்த பணம் திடீரென காணாமல் போனது. இதனால் மனைவி ஜோதி தான் பீரோவில் இருந்து படத்தை திருடியிருப்பார் என்று அவரிடம் அனுமந்த ராவ் தகராறு செய்துள்ளார்.

ஆனால் ஜோதி, தான் பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் ஆத்திரமடைந்த அனுமந்த ராவ், ஹோட்டலில் சிக்கன் வறுவல் வாங்கி வந்து அதில் விஷம் கலந்து ஜோதிக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து சிக்கன் வறுவல் சாப்பிட்ட ஜோதி மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த ஜோதியின் உறவினர்கள் உடனடியாக ஜோதியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், கணவர் கொடுத்த சிக்கன் வறுவலை சாப்பிட்டவுடன் ஜோதி மயக்கம் அடைந்ததும், சிக்கன் வறுவலில் கணவர் விஷம் கலந்து கொடுத்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கணவர் அனுமந்த ராவை கைது செய்த போலீசார், மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனுமந்த ராவின் தாய் மற்றும் சகோதரர் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband killed his wife by mixing poison in fried chicken in Andhra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->