கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை.. மனைவியை அடித்து கொன்ற கணவன்..! - Seithipunal
Seithipunal


கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் அப்புகுட்டன் (50). இவர் நாட்டு வைத்தியராக இருந்து வருகிறார். இவருக்கும் ஹேமா என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. கடந்த 26ம் தேதி ஹேமா குளியல் அறையில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வரதட்சணை கொடுமையால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஹேமா குழந்தை மனநிலை கொண்டவர் என்பதால் திருமணத்தின் போது 75 சரவன் நகையும் 5 லட்சம் பணமும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

ஆனால், அதன்பின் அப்புகுட்டன் கூடுதல் வரதட்சணை கேட்டு தினமும் ஹேமாவை சித்ரவதை செய்து வந்துள்ளார். இதுகுறித்து ஹேமா பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர் முன் பாசமாக உள்ளது போல நடித்துள்ளார். சம்பவதன்று, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதில், ஆத்திரமடைந்த அப்புகுட்டன் அவரை தரையில் அடித்து கொலை செய்துள்ளார். இதனை அடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband kills his wife due to ask extra dowry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->