வரதட்சணை கேட்டு மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கொடூர கணவன்.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சும் (வயது 25). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இலியாஸ் என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் அஞ்சுமை கணவர் வீட்டார் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

அந்த வகையில் அந்த பெண்ணிடம் கார் வேண்டும், பணம் வேண்டும் என்று வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த பெண் 10 நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் வரதட்சணை கொடுமை குறித்து கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அஞ்சும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த பெண்ணின் பெற்ற மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு சென்று பார்த்த போது வரதட்சனை கேட்டு பெண்ணின் கணவர் மற்றும் அவரது வீட்டார் அஞ்சும் வாயில் ஆசிட் ஊற்றியுள்ளனர். இதனால் பயங்கரமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமாகி அஞ்சும் உயிரிழந்தார்.

அஞ்சும் உயிரிழப்பதற்கு முன்பாக அவர் ஆசிட் ஊற்றியதை வாக்குமூலமாக அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அஞ்சும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband poured acid on his wife mouth for dowry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->