விடுதலை தினத்தை கொண்டாட முடிவு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா..! - Seithipunal
Seithipunal


இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகிய நிலையில்,  ஓட்டு வங்கி அரசியல் காரணமாக இங்கு ஆட்சி செய்தவர்கள், ஹைதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட தயாராக இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்த பின், பல மாநிலங்கள் இணைக்கப்பட்டு ஒரே நாடாக உருவானது. நிஜாம் ஆட்சியாளர்களிடம் இருந்த ஹைதராபாத், 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 
17- ம் தேதி இந்தியாவுடன் இணைந்தது. இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஹைதராபாத் விடுதலை தினமாக கொண்டாடுகின்றனர். இந்தாண்டு பாரதிய ஜனதாவும் இதை  கையில் எடுத்து, 'ஹைதராபாத் விடுதலை தினம்' என்ற பெயரில் மாநிலம் முழுதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக இன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹைதராபாத் வந்தார். செகந்திராபாதில் உள்ள ராணுவ மைதானத்தில் நடக்கும் இவ்விழாவில் அவர் பேசியதாவது: "நாடு 1947 ல் சுதந்திரம் பெற்றாலும், ஹைதராபாத்தை நிஜாம்கள் ஆட்சி செய்தனர். 13 மாதங்கள் நிஜாம்களின் அடியாட்களுக்கு மக்கள் அச்சப்பட்டு வந்தனர். ஹைதராபாத் விடுதலை தினத்தை அதிகாரப்பூர்வமாக கொண்டாட வேண்டும் என மக்கள் விரும்பினர். 

அந்த தினத்தை கொண்டாடுவதாக பல அரசியல் கட்சிகள் உறுதி அளித்தன. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக ஹைதராபாத் விடுதலை தினத்தை கொண்டாடுவதில்லை. நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளாகியும் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக, இந்த பகுதியை ஆட்சி செய்தவர்கள், கொண்டாட தயாராகவில்லை.

தெலுங்கானா, ஹைதராபாத் - கர்நாடகா, மரத்வாடா மக்கள், இந்த பகுதியில் இருந்த கொடுமைக்காரர்களின் அட்டூழியத்திற்கு எதிராகவும், இந்தியாவுடன் சேர்வதற்கும் தைரியமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பகுதியை ஆள்பவர்களின் மீதுள்ள பயத்தின் காரணமாக ஹைதராபாத் விடுதலை தினமாக கொண்டாடாமல் வேறு பெயரில் கொண்டாடுவார்கள். உங்கள் மனதில் இருந்து பயத்தை அகற்றுங்கள் என உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டதால், மக்களை கொடுமை படுத்தியவர்கள் இனிமேல், நாட்டிற்காக முடிவெடுக்க முடியாது.

தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஐதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட முடிவு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hydrabad independent day function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->