தேர்தல் ஆலோசனை வழங்க அரசியல் கட்சிகளிடம் ரூ.100 கோடி வாங்கினேன்- பரபரப்பை ஏற்படுத்திய பிரசாந்த் கிஷோர்! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தின் பிரசாந்த் கிஷோர் தற்போது அரசியல் ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல மாநிலங்களில் பல முக்கிய அரசியல் கட்சிகளுக்காக தேர்தல் வியூகங்களை உருவாக்கி, அவர்களுக்கு வெற்றியை உறுதி செய்தவர்.

இதற்காக அவர் பெரும் கட்டணமும் வாங்கியதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவர் தனது கட்டணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் நடத்தி வரும் இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், பிரசாந்த் கிஷோர், “நான் தேர்தல் வியூக ஆலோசகராக ரூ.100 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளேன். இதன் மூலம் எனக்கு நிதி என்பது ஒரு சிக்கல் அல்ல” என கூறினார். 

அவர் மேலும், பல மாநில அரசியல் கட்சிகளின் வெற்றியில் தனது ஆலோசனைகள் முக்கிய பங்கு வகித்துள்ளதாக குறிப்பிட்டார். இன்று, பீகாரின் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய இடைத்தேர்தல்களில் தனது ஜன சுராஜ் கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.

சமீபத்தில் அரசியல் உலகில், குறிப்பாக தேர்தல் ஆலோசனைகளுக்காக பிரசாந்த் கிஷோர் பெறும் கட்டணத்தை பற்றிய இந்த வெளிப்படையான கருத்து பெரும் விவாதமாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I bought Rs 100 crores from political parties to give election advice Prashant Kishore created a stir


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->