கர்நாடக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த ஐகோர்ட்! காரணம் இது தான்? - Seithipunal
Seithipunal


கர்நாடகா, பெங்களூருவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் நகரின் பல்வேறு இடங்களில் மக்களின் வசதிக்காக பொது கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

அவற்றை பெங்களூரு மாநகராட்சி நிர்வகித்து வருகிறது. கர்நாடகா உச்ச நீதிமன்றத்தில், பெங்களூருவில் உள்ள பொது கழிப்பறைகள் முறையாக பராமரிப்பதில்லை என தனியார் நிறுவனம் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த வழக்கு விசாரணை நடத்திய போது பெங்களூருவில் உள்ள பொதுக்கழிப்பறைகளை ஆய்வு நடத்தி அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

ஆனால் மாநகராட்சி சார்பில் எந்த ஒரு அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை. இதனால் அந்த மனு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. 

விசாரணையின் போது நீதிபதிகள் இருதரப்பு வாதங்களை கேட்டு அறிந்து பின்னர் மாநகராட்சி, பெங்களூருவில் உள்ள பொது கழிப்பறைகளை நிர்வகிக்க தவறிவிட்டது. 

மேலும் இது தொடர்பாக எந்த ஒரு அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை. பெங்களூரு போன்ற பெரு நகரில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் போதிய அளவு கழிப்பறைகளை கட்ட மாநகராட்சி முன்வரவில்லை. 

பொதுக்கழிப்பறைகள் விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததால் கர்நாடக அரசுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். 

இது தொடர்பாக விளக்கம் அளிக்க நகர்ப்புற மேம்பாட்டு துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, அடுத்த மாதம் 2 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I Court imposed fine Rs 5 lakh Karnataka government


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->