எனது பேச்சை முழுவதுமாக கேளுங்கள்.. நான் ராஜினாமா செய்ய கூட தயார் - அமித்ஷா.!
iam ready to resign amitsha press meet
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சையாக பேசியதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அமித்ஷா செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் பேசியதாவது;-
"எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து குறை சொல்கிறார்கள். எனது பேச்சை திரித்து கூறுகிறார்கள். நான் பேசியதை முழுமையாக கேளுங்கள். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. காங்கிரஸ்தான் இரண்டு முறை அம்பேத்கரை தோல்வி அடையச் செய்தது. அம்பேத்கர் பற்றி நேரு குறை கூறியிருக்கிறார்.
பா.ஜ.க.வும், மோடி அரசும் தான் அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கிறது. நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அம்பேத்கரை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார்கள். அம்பேத்கரின் வரலாற்று புகழை உலகம் முழுவதும் நிலைநாட்டியது பா.ஜ.க. அரசுதான். காங்கிரஸ் கட்சியினர் தான் அம்பேத்கரின் சட்டத்திற்கு எதிரானவர்கள்.
நமது நாட்டின் ராணுவத்தினரை கூட காங்கிரஸ் அவமதித்து தான் வருகிறது. இந்தியாவை பிளவுபடுத்தும் வகையில் அந்நிய மண்ணில் காங்கிரஸ் கருத்து தெரிவித்து வருகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளை கூட காங்கிரஸ் கட்சி கொண்டாடவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோதுதான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிந்தது. பா.ஜ.க. அரசுதான் அம்பேத்கரின் சட்டங்களை அமல்படுத்துகிறது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு நன்மை செய்வது பா.ஜ.க. அரசுதான். கார்கே என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார்.
அதுதான் அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றால் நான் ராஜினாமாவும் கூட செய்கிறேன். ஆனால், அது அவரின் பிரச்சனைகளை தீர்க்காது. அவர் இன்னும் 15 ஆண்டுகள் அதே இடத்தில் தான் அமர்ந்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
English Summary
iam ready to resign amitsha press meet