கேரளா மருத்துவ கழிவுகள் - தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு பறந்த அதிரடி உத்தரவு.!
green tribunal orders action kerala medical waste
தமிழகத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கேரளாவில் இருந்து லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
அந்த வகையில், நேற்று முன்தினம் திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் நேற்று முன்தினம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ளன.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடன்கிர்த்து கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றும் செலவினை கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் வசூலியுங்கள் என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
green tribunal orders action kerala medical waste