காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் - ராகுல்காந்தி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது. அதே போல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இதில் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் முன்னால் எம்பி ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.

அப்போதே பேசிய அவர், தற்போது பணக்காரர்கள் மீது மட்டுமே அரசின் கவனம் உள்ளது. ஆனால் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில்கள் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. இதில் வங்கிகளில் இருந்து பணக்காரர்கள் எளிதாக கடன் பெற முடிகிறது. 

அவர்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றால் அரசு அஊனை தள்ளுபடி செய்கிறது. ஆனால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யப்படுவதில்லை. விவசாயிகள் மற்றும் சிறு தொழில்கள் செய்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

தற்போது உள்ள 5 விதமான வரி விதிப்பு மிகவும் சிக்கலானது. இதில் பாதி மக்களுக்கு எப்போது எப்படி தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. பணக்காரர்கள் தங்களுக்கு கணக்காளர்களை வைத்துள்ளனர். ஆனால் சிறிய தொழில் செய்பவர்களுக்கு அது சாத்தியமில்லை. அதனால் சிறு தொழில்கள் பெரும் பாதிப்படைகின்றன. 

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றி அமைப்போம். மேலும் மிக எளிமையான சிறிய வரிவிதிப்பை ஒரே வழிமுறையாக கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If Congress comes to power GST tax will be changed - Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->