பெற்றோரை கவனிக்காவிட்டால் அவ்ளோதான்.. பிள்ளைகளுக்கு ஆப்பு வைத்த சுப்ரீம் கோர்ட்... வெளியானது அதிரடி தீர்ப்பு!  - Seithipunal
Seithipunal


வயதான காலத்தில் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி  தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளனர்.மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை கவனித்துக் கொள்ளாத மகன் மீது போடப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெற்ற தாய் ,தந்தையை பார்க்காத பிள்ளைகளால் சில பெற்றோர்கள் இன்றும் கஷ்டப்பட்டுகொண்டுருக்கிறார்கள். பிள்ளைகள் இருந்தும் பெற்றோர்கள் அனாதை இல்லங்களிலும் ,ஆதரவற்ற இல்லங்களிலும் வாழக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை நாம் கண்முன் பார்க்கமுடிகிறது. அதுமட்டுமல்லாமல் பெற்றவர்களின் சொத்துக்களை வாங்கிக்கொண்டு பிள்ளைகள் அவர்களை அனாதைபோல தள்ளிவிடும் சம்பவங்களும் நடந்து வருகிறது.இப்படி பட்ட சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அளவில் பிள்ளைகளுக்கு ஆப்பு வைக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.   

 மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை கவனித்துக் கொள்ளாத மகனிடம் இருந்து தான் வழங்கிய சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் என்றும்  மேலும் தான பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 இந்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், வயதான பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்பதற்காக தான பத்திரத்தை ரத்து செய்ய முடியாது என்றும் அவ்வாறு கவனிக்க வேண்டும் என்று மனுதாரர் எந்த நிபந்தனையையும் பத்திரம் எழுதும்போது விதிக்கவில்லை என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததையடுத்து  அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வில் தற்போது விசாரணைக்கு வந்தது.அப்போது பேசிய நீதிபதிகள்,  சொத்துகளை எழுதி கொடுத்த பிறகு பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காமல் போவது மிகவும் கவலை அளிக்கிறது.

பிள்ளைகள் கவனிக்காவிட்டால் அவர்களுக்கு பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம்என்றும்  அந்த தான பத்திரத்தை செல்லாது என்று அறிவிக்க 2007 சட்டத்தின் பிரிவு 23 [பெற்றோர் பராமரிப்பு, நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள்] சட்டத்தில் இடம் இருக்கிறது என தெரிவித்தனர்.

மேலும் சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளை சொத்துகளை பெற்றவர் செய்ய வேண்டும் என்றும்  அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதி கொடுத்தது செல்லாது என்று அறிவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 If you dont take care of your parents thats it The Supreme Court has given a wedge to the children The verdict is out!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->