இந்த "7 மாநிலங்களில் வெப்ப அலை" வீசும்.. வானிலை மையம் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் மக்களவை பொது தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. அந்தத் திட்டத்தின் படி கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையம் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெறாததால் இதற்கு ஆன காரணம் குறித்து ஆராய்ந்ததில் நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் யாரும் வாக்களிக்க செல்லவில்லை என்பது தெரிய வந்தது. 

 

தமிழ்நாட்டில் வாக்களிக்க சென்ற மூன்று மூத்த குடிமக்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அடுத்து நடைபெற உள்ள 6 கட்டம் தேர்தல் குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழக முற்பட ஏழு மாநிலங்களில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

அந்த எச்சரிக்கையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இன்று முதல் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இரவு நேரங்களில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை இருக்கும் எனவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMD warn shit wave in 7 states in India


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->