முக்கிய அறிவிப்பு- பான்-ஆதார் எண்ணை இணைக்க நாளை தான் கடைசி நாள்!!
Important Notice Tomorrow is the Last Day to Link PAN Aadhaar Number
ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆதான் மற்றும் பான் அட்டையை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் ஆதார் எண்ணை குடிமக்களின் முக்கியமான ஆவணங்களுடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
வரி ஏய்ப்பை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பான் கார்டு மூலமாக நடைபெறும் பணம் மோசடிகள் கண்டறியும் இந்த நடவடிக்கை உதவும் என்உ தெரிவிக்கப்பட்டுள்ளது..
தற்போது ரூ.1,000 அபராதத்துடன் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை மத்திய அரசு ஜூன் 30ஆம் தேதி வரை நீடித்திருந்தது. இந்நிலையில், பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.
நாளை ஒரு நாள் மட்டுமே பான்-ஆதார் எண்ணை இணைப்பதற்கு கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்காவிட்டால், புதிதாக வங்கிக் கணக்கை திறக்க முடியாது, புதிய கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பெற முடியாது மற்றும் பாஸ்போர்ட் பெற முடியாது.
வருமான வரிச்சட்டத்தின்படி, 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி பான் கார்டு வழங்கப்பட்ட அனைவருமே ஆதார் கார்டுடன் பான் கார்டை கட்டாயமாக இணைக்க வேண்டும். ஜம்மூ காஷ்மீர், அசாம், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்கள்,
அயலக இந்தியர்கள், 80 வயதை தாண்டியர்கள் இந்த இணைப்பு செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Link Aadhaar என்ற ஆபஷனை கிளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து பான்-ஆதார் கார்ட்டை இணைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Important Notice Tomorrow is the Last Day to Link PAN Aadhaar Number