வங்கிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!  - Seithipunal
Seithipunal


ஒரு முறைக்கு, 50,000 ரூபாய்க்கு அதிகமாக ரொக்க பணம் செலுத்தும் வங்கி வாடிக்கையாளர்களிடம், பான் எண் பெறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே, ரொக்கப்பண பரிவர்த்தனை விவரங்களும் திரட்டப்படுகின்றன.

பான் எண் இல்லாதவர்களிடம், 50,000 ரூபாயோ அல்லது அதற்கு மேல் பணம் பெற வேண்டாம் என்ற உத்தரவு ஏற்கெனவே அமலில் உள்ளது. இருப்பினும், நிறைய வாடிக்கையாளர்கள், பான் எண் இல்லாமலேயே ரொக்க பண பரிவர்த்தனைக்கு அனுமதி கேட்கிறார்கள். 

இந்த தகவலை, வங்கிகள் வருமான வரித்துறையிடம் கொண்டு சென்றுள்ளன. இதையடுத்து வருமான வரித்துறையினர் இனிமேல், வங்கி வாடிக்கையாளர்கள், 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேலான ரொக்க பணத்தை வங்கியில் செலுத்த வந்தால் அவர்களிடம், ஆதார் எண், வங்கி கணக்கு விவரம், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை, அதற்கான விண்ணப்பத்தில் பெற்ற பிறகே, ரொக்க பணம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை, வங்கிகளுக்கு உத்தரவு போட்டுள்ளது. வருமான வரித்துறையின் இந்த உத்தரவு, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

income tax department new directives form to bank


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->