#Justin || வருமான வரி செலுத்த புதிய செல்போன் செயலி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வருமான வரித்துறைக்கு வரி செலுத்துபவர்களின் நலன் கருதி 'ஏ.ஐ.எஸ். பார் வரி செலுத்துவோர்' என்ற புதிய செல்போன் செயலி ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது குறித்து டெல்லி வருமானவரி கமிஷனர் சுரபி அலுவாலியா தெரிவித்ததாவது:- "இந்த செயலி மூலம் வரி செலுத்துபவர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் தகவல் சுருக்கம் மற்றும் தகவல் அறிக்கைகளை பார்க்க முடியும். 

இந்த செயலி வருமான வரித்துறையால் இலவசமாக வழங்கப்படும் செல்போன் பயன்பாடு ஆகும். வரி செலுத்துவோர் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து  இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இந்த செயலியில், வட்டி, ஈவுத்தொகை, பங்கு பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல், வருமான வரி திரும்பப் பெறுதல் உள்ளிட்ட தகவல்களை பெற முடியும். இந்த செல்போன் செயலியை அணுக, வரி செலுத்துவோர் பயன்பாட்டில் பதிவு செய்ய வேண்டும். 

அதிலும் குறிப்பாக இந்த செயலியில், பான் எண்ணை வழங்குதல், செல்போன் எண்ணில் அனுப்பப்பட்ட ஓடிபி மூலம் அங்கீகரிக்கவும், மின்னஞ்சல், இ-பைலிங் போர்ட்டலில் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளது 

இந்த அங்கீகாரத்திற்குப் பிறகு, வரி செலுத்துவோர் இந்த செயலியை செயல்படுத்த முடியும். மக்கள் செல்போன் பயன்பாட்டை அணுக நான்கு இலக்க பின்னை அமைக்க வேண்டும். இந்த செயலி மேம்படுத்தப்பட்ட வரி செலுத்துவோர் சேவைகள் இணக்கத்தை எளிதாக்குகிறது" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

income tax department new mobile app intro


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->