இந்தியா மற்றும் பூடான் நுழைவு வாயில் திறப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பூடான் அரசு..!
India-Bhutan Gateway Opening
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 வருடங்களாக இந்தியா மற்றும் பூடான் எல்லை மூடப்பட்டிருந்தது. தற்போது, இந்த நுழைவு வாயில்களை அரசாங்கம் திறப்பதற்கு முடிவு செய்துள்ளது.
அந்த முடிவின் படி, வருகிற செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அசாம் மாநிலத்தில் உள்ள சம்ரப் ஜோங்கர் மற்றும் கெலேபு நுழைவு வாயில் திறக்கப்பட இருக்கிறது. இந்த நுழைவு வாயில்களை திறப்பது குறித்து இருநாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தியதில், இந்த பேச்சுவார்த்தை தற்போது சுமூகமாக முடிவடைந்தது. இதையடுத்து நுழைவு வாயில்கள் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பூடான் அரசு வெளியிட்டுள்ளது. மேலும் வணிகம், வர்த்தகம், சுற்றுலா மற்றும் அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக கடந்த 2 வருடங்களாக மூடப்பட்டிருந்த நுழைவு வாயில்கள் தற்போது திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
India-Bhutan Gateway Opening