பண வீக்கத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை.! மேலும் 26 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பணவீக்கத்தை கட்டுப்படுத்த மேலும் 26 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அதே சமயம் மொத்த பணவீக்கம் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.

கொரோனா காலங்களில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகள், ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கும் இடையேயான போரினால் வர்த்தக பாதிப்பு உள்ளிடட காரணங்களால் பணவீக்கம் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர கூடுதலாக 26 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளது. இதனால் அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

இதனைத் தொடர்ந்து பணவீக்கத்தை கட்டுப்படுத்த உர மானியம் உட்பட பல்வேறு சலுகைகளை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சலுகைகளை அளிப்பதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு நிதிச்சுமை இரண்டு மடங்காகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India consider spending twenty six billion to control inflation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->