ஸ்தம்பிக்க போகும் இந்தியா! நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் ஸ்டிரைக்! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் வரலாற்று சிறப்புமிக்க ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது.

கடந்த வாரம் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி மருத்துவராக பணியாற்றிய பெண்ணை கொடூரமான வகையில் பாலியல் வன்கொடுமை செய்து ஒரு கும்பல் கொலை செய்துள்ளது.

மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை ஒரு நபர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தடயங்களை அழிக்க சிலர் முயற்சித்துள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது.

இந்த நிலையில், இந்த சமபவத்தில் முழு விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்ய வேண்டும், மருத்துவர் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று போராட்டம் வெடித்துள்ளது.

நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை மருத்துவர்கள்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய மருத்துவர்கள் சங்கம் விடுத்துள்ள இந்த போராட்ட அறிவிப்பின்படி, நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை  புறநோயாளிகள் பிரிவு இயங்காது, சாதாரண அறுவை சிகிச்சைகள் நடைபெறாது.

அவசர அறுவை சிகிச்சைகள், விபத்து பிரிவுகள் மட்டும் இயங்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india Doctors Protest 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->