உலகத்திற்கு வழிகாட்ட வேண்டியது இந்தியாவின் கடமை, அது இந்தியாவின் பாரம்பரியத்தில் உள்ளது:- ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்..!
India duty is to guide the world says RSS chief Mohan Bhagwat
'' உலகத்திற்கு வழிகாட்ட வேண்டியது இந்தியாவின் கடமை. அது இந்தியாவின் பாரம்பரியத்தில் உள்ளது,'' என டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
அத்துடன் அவர் அங்கு பேசுகையில்; மக்களுக்கு புதிய வசதி கிடைக்கிறது. அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அவை அனைவருக்கும் கிடைப்பது கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒருவருக்கு குறையும் போது, மற்றொருவருக்கு அதிகரிக்கும். இது நீதி. உலகம் இரண்டு வழிகளில் சிந்திக்கிறது. இரண்டு பாதைகளை பின்பற்றினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது, இந்தியா உடன் இணைந்து 03-வது பாதையை தேர்வு செய்தனர். தற்போது, உலகத்திற்கு வழிகாட்ட வேண்டியது இந்தியாவின் கடமை. அது இந்தியாவின் பாரம்பரியத்தில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில்; நமது இயல்பிலும், மாண்பிலும் அஹிம்சை உள்ளது எனவும், ஆனால், நீங்கள் என்ன செய்தாலும் சிலர் மாற மாட்டார்கள் என்றும், தொடர்ந்து உலகிற்கு தொல்லை கொடுப்பார்கள் என்றும் அது பற்றி என்ன செய்ய வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், அஹிம்சை என்பது நமது மதம். குண்டர்களுக்கு பாடம் கற்பிப்பதும் நமது மதம். நமது அண்டை வீட்டாரை நாம் தொந்தரவு செய்வது கிடையாது. ஆனால், ஒருவர் தொந்தரவு செய்தால் என்ன செய்வது. அரசனின் கடமை மக்களை பாதுகாக்க வேண்டியது. அரசன் தனது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
English Summary
India duty is to guide the world says RSS chief Mohan Bhagwat