இந்தியாவில், 7% க்கும் கீழ் குறைந்த பணவீக்கம் - இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சில்லறை விலை பணவீக்கம் குறித்து தரவுகள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் மாதத்திற்கான சில்லரை விலை பணவீக்கம் குறித்த தரவுகள், நாளை வெளியாக உள்ளன. 

இந்நிலையில், இந்தியாவின் சில்லறை விலை பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதம் 7.41% ஆக உயர்ந்தது. ஆனால், இந்த சதவிகிதம் அக்டோபர் மாதத்தில் 7% க்கும் கீழ் குறையும். ஏனென்றால், செப்டம்பர் மாத பணவீக்க உயர்வுக்கு, உணவு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்திருந்தது தான் முக்கிய காரணமாக அமைந்தது.

தற்போது, பணவீக்கம் இந்தியாவிற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. எனினும், கடந்த 6 - 7 மாதங்களாக, அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுத்து வந்த நடவடிக்கைகளால், அக்டோபர் மாதத்தில், பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய பணவீக்க இலக்கான ஆறு சதவீதத்தை மேலும் அதிகரிக்க தேவையில்லை என்றும், இந்த ஆறு சதவீதத்தை தாண்டினால், அது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும், ஒட்டுமொத்தமாக இந்தியாவின் மேக்ரோ பொருளாதார அடிப்படைகள் வலுவாகவும், மீள்தன்மையுடனும் உள்ளது" என்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india inflation low in seven percentage indian researve bank president speach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->