இந்திய குடியரசு தினவிழா: தலைமை விருந்தினராக பிரான்ஸ் அதிபர்!
India invites French president republic day chief guest
இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தின விழா டெல்லியில் ஜனாதிபதி கொடியேற்றத்துடன் நடைபெறும். மேலும் நாட்டின் கலாச்சாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமை பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமான அணி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுப்பது வழக்கம்.
அதுபோல் அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோபேடனுக்கு அழைப்பு விடுத்திருந்ததாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்தார்.
ஆனால் ஜோபேடன் இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க மாட்டார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி கௌரவ விருதினராக கலந்துகொண்டபோது இரண்டு தலைவர்களும் சந்தித்து பேசினர்.
English Summary
India invites French president republic day chief guest