உலக கோப்பையை தவறவிட்ட இந்தியா: விரக்தியில் இளைஞா் விபரீத முடிவு! - Seithipunal
Seithipunal


இந்திய அணி, உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததால் மேற்கு வங்கத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் மன உளைச்சல் அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேற்கு வங்கம் பங்குரா மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல் லோகர் (வயது 23). கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் அங்குள்ள ஒரு துணிக்கடையில் பணியாற்றி வந்தார். 

நேற்று முன்தினம் நடைபெற்ற கிரிக்கெட் இறுதிப் போட்டி போட்டியை காண்பதற்காக அவர் பணியில் இருந்து விடுப்பு எடுத்துவிட்டு தொலைக்காட்சியில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.

இதில் ஆஸ்திரேலியா இந்திய அணியை தோற்கடித்து விட்டதால் கடும் மன உளைச்சல் அடைந்த ராகுல் இரவு 11 மணி அளவில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது தொடர்பாக அவரது உறவினர்கள் தெரிவித்திருப்பதாவது, ராகுலுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. உலகக்கோப்பை போட்டியில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெறும் என உற்சாகத்துடன் இருந்து வந்தார். 

ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெறாததால் மன வேதனை அடைந்து இந்த தற்கொலை முடிவு எடுத்தது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என தெரிவித்துள்ளனர். 

இதனை அடுத்து போலீசார் ராகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India missed out World Cup Desperate younger committed suicide 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->