பொய் பிரச்சாரம் செய்யும் எதிர்க்கட்சிகள் - நாடாளுமன்றத்தில் அமித் ஷா கொடுத்த பதிலடி! - Seithipunal
Seithipunal


புதிய குற்றவியல் திருத்த சட்டங்கள் மூலம் விரைவாக நீதி கிடைக்கும். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று, இன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.

மேலும், புதிய சட்டங்கள் மூலம்  ​​பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார்தாரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். தண்டனை வழங்குவது மட்டுமல்ல, நீதியை நிலைநாட்டவும், இந்த திருத்த சட்டங்கள் உதவும் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அமித்ஷா கடும் கண்டனம் தெரிந்தார்.

பின்னர் மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், "நான் எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். என்னைப் பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை.

கடந்த 10 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. எனது எம்.பி. பதவியையும், வீட்டையும் பாஜக அரசு பறித்தது.

கடந்த 10 ஆண்டுகளாக கடுமையான தாக்குதலுக்கு அரசியல் சாசனம் உள்ளானது. இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது" என்று ராகுல்காந்தி பேசினார்.

முன்னதாக மாநிலங்களவையில் RSS குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியவற்றை அவைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதால் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அப்போது RSS உறுப்பினராக இருப்பது குற்றமல்ல என அவைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் பதில் அளித்தார். 

இதற்கிடையே, புதிய குற்றவியல் சட்டத்தின் படி சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழிபறி சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 304-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India New Criminal Reform Acts BJP AmitSha NDAlliance


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->