இந்தியாவா? பாரதமா? 2016-ல் உச்சநீதிமன்றம் தந்த அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியா, பாரதம் எப்படி வேண்டுமானாலும் நாட்டு மக்கள் அழைத்து கொள்ளலாம் என்று, உச்சநீதிமன்றம் கடந்த 2016 ஆம் ஆண்டே ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜி20 மாநாடு அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் எனபத்திற்கு பதிலாக "பாரத குடியரசுத் தலைவா்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இதற்க்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தோனேசியா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி நிரலில், இந்திய பிரதமர் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக பாரத பிரதமர் என்று குறிப்பிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டே இந்தியாவை 'பாரதம்' என்றுதான் அழைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, பாரதம் என்ற பெயா் மாற்றத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிா்ப்பு தெரிவித்தது.

மேலும், அரசியல் நிா்ணய சபையில் விரிவான ஆலோசனைக்கு பிறகு, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் 'இந்தியா' என்று பெயரிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வாதம் வைத்திருந்தது.

இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குா், நீதிபதி யு.யு. லலித் ஆகியோா் அடங்கிய அமா்வு, "பாரதம்" என்று அழைக்க விரும்புபவா்கள் அப்படியே அழைக்கலாம். இந்தியா என்று அழைக்க விரும்புபவா்கள் "இந்தியா" என அழைக்கலாம் என்று தீர்ப்பு வழங்கி, மனுவை தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIA OR BHARAT SC CASE JUDGEMENT IN 2016


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->