பாகிஸ்தானுக்கு எதிராக போர் புரிந்த வீரர் பைரோன் சிங் ரத்தோர் காலமானார்.! - Seithipunal
Seithipunal


கடந்த 1971-ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஆரம்பித்தது. இதில், இந்தியா சார்பில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த நாயக் அந்தஸ்து பெற்ற வீரரான பைரோன் சிங் ரத்தோர் கலந்துகொண்டு பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக போரிட்டார். 

அவருடைய வீரமான செயலுக்காக கடந்த 1972-ம் ஆண்டு சேனா விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் கடந்த 1987-ம் ஆண்டு நாயக் பணியில் இருந்து  ஓய்வு பெற்றார். இதையடுத்து, அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், 81 வயதுடைய பைரோன் சிங் ரத்தோர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு குறிப்பில், "நம்முடைய தேசத்திற்கு சேவையாற்றியதற்காக வீரர் பைரோன் சிங் ரத்தோர் நினைவு கூறப்படுவார். 

நமது தேச வரலாற்றில் எழுந்த நெருக்கடியான நேரத்தில் தன்னுடைய துணிச்சலை வெளிப்படுத்தியவர். அவரது மறைவால் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளேன். இந்த துயரம் நிறைந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் கலந்துள்ளன. ஓம் சாந்தி என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் பைரோன் சிங் ரத்தோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india pakisthan war legend bhairon singh rathore rest in peace


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->