ஓசூரில் பிரபல தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!....பணியாளர்கள் குறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இதோ! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் டாடா நிறுவனத்தின் மின்னணு உதிரிபாக தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில், இந்த தொழிற்சாலையில் உள்ள ரசாயன கிடங்கில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம்  குறித்து டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் பாதுகாப்பு நெறிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டதால் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே முதலமைச்சர் மு .க ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா பகுதியில்  டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் தொழிற்சாலையின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A terrible fire accident in a famous factory in Hosur here is the report released by the company about the employees


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->