ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்!...பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டிற்கு ராணுவ வீரர்கள் 4 பேர் காயம்! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு முதல் கட்ட சட்டசபை தேர்தல் கடந்த 18-ம் தேதி  நடைபெற்றது. அந்தவகையில் காஷ்மீரில் 16 தொகுதிகள் மற்றும்  ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

பின்னர்  2-ம் கட்ட சட்ட சபை தேர்தல் கடந்த 25-ம் தேதி தொடங்கிய நிலையில்,  ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 3ம் கட்ட தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள  தேவ்சார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டை மோதலில், பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமடைந்ததாகவும், பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் போக்குவரத்து கூடுதல் எஸ்.பி. மும்தாஜ் அலி படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tension in Jammu and Kashmir 4 soldiers injured in terrorist firing


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->