கடல்சார் உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதியை ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்.! அமைச்சர் பியூஸ் கோயல்.! - Seithipunal
Seithipunal


கடல்சார் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியை அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடியிலிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் கொச்சியில் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது என்றார்.

நிலையான மீன்பிடித்தல், கடலோர கப்பல் போக்குவரத்து மற்றும் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் இலக்கை அடைய முடியும் என்றார்.

மேலும் ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தடையில்லா ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இங்கிலாந்து கனடாவுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India plans to boost maritime exports


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->