ஆங்கிலப் புத்தாண்டு : நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி முர்மு வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாட்டின் ஜனாதிபதி முர்மு, தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்திருப்பதாவது: 

"புத்தாண்டு நாளில் நாட்டில் உள்ள மக்களுக்கும், வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த புத்தாண்டின் விடியல், அனைவருக்கும் மகிழ்ச்சியையும், இலக்குகளையும், உத்வேகங்களையும், நமது வாழ்வில் பெரிய சாதனைகளையும் கொண்டு வரட்டும். இந்த நன்னாளில் தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வதற்காக உறுதி ஏற்போம். 

இந்த 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் நமது தேசம் மற்றும் மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது: "இந்த மகிழ்ச்சி நிறைந்த நாளில், நமது முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையை உறுதிசெய்து, அதில் உத்வேகத்துடன் நமது முயற்சிகளைத் தொடர்வதற்கு ஒரு வாய்ப்பாகும். 

நாம் அனைவரும் நாட்டை முன்னேற்றம் மற்றும் செழிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டுடன் இந்தப் புத்தாண்டைத் தொடங்குவோம். இதுவரை இல்லாத வகையில் முன்னேறிக் கொண்டிருக்கும் தேசம், வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளுக்கு உலகில் மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது. 

நமது வாழ்வில் அமைதி, ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கான நமது முயற்சிகளை நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india president droubadi murmu new year wish to peoples


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->