மீண்டும் வரப்போகுது மழை ..மக்களே உஷார்.. வானிலை மையம் ரிப்போட்! - Seithipunal
Seithipunal


கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.மேலும் சென்னையில் வானம் இன்று மேகமூட்டத்துடன் காணப்படுமென  தெரிவித்துள்ளது.


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்பதால்  காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்  10-ந்தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

சென்னை நிலவரம்: 

சென்னையை பொறுத்தவரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் . அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது .

மீனவர்களுக்கு எச்சரிக்கை: 

குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசலாம் என்றும்  அதேபோல தென்கிழக்கு அரபிக்கடலின் தெற்கு, மேற்கு, மத்திய மேற்கு பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்லவேண்டாம்வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Its going to rain again People beware Weather Center Report


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->