காஷ்மீர் விவகாரம்.! சீனா-பாகிஸ்தான் நாடுகளின் கூட்டறிக்கையை இந்தியா நிராகரிப்பு.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சீன பிரதமர் லீ கெகியாங் விடுத்த அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக சீனா சென்றார். இந்த பயணத்தில் அதிபர் ஜின்பிங் உள்பட சீன அரசின் உயர்மட்ட தலைவர்களுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில், இரண்டு நாடுகளும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், காஷ்மீர் பிரச்சிைனக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா, சீனா-பாகிஸ்தான் கூட்டறிக்கையை நிராகரித்து. மேலும் இந்த அறிக்கை தேைவயற்றது என்றும், இதுபோன்ற அறிக்கைகளை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று செய்தியாளர்களிடம், காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாக எப்போதும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India rejects China Pakistan joint statement on Kashmir


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->