ரூ.19,600 கோடி மதிப்பில் 17 கப்பல்கள்.. இந்தியா ஒப்பந்தம்..! - Seithipunal
Seithipunal


இந்திய கப்பற்படையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை பலப்படுத்த, 11 ரோந்து கப்பல்கள் மற்றும் 6 ஏவுகணை கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று புதுடெல்லியில் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மத்திய அரசின் "ஆத்மநிர்பர் பாரத்" என்று அழைக்கப்படும் தொலைநோக்குப் பார்வை திட்டத்தின் கீழ் கையெழுத்தாகியுள்ளது. 

இது தொடர்பாக ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மொத்தம் 11 ரோந்து கப்பல்களில் 7 கப்பல்கள் கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தாலும், 4 கப்பல்கள் கொல்கத்தாவின் கார்டன் ரீச் நிறுவனத்தாலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கப்பல்கள் மூலம் கடற்படை தனது போர்த் திறனைத் தக்க வைத்துக் கொள்ளவும், கண்காணிப்பு பணியை மேம்படுத்தவும், மீட்பு பணி மேற்கொள்ளவும், கடற்கொள்ளையர் எதிர்ப்பு மற்றும் ஊடுருவலை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India signed agreement to buy 17 ships worth 19600 crore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->