இரவு நேரத்தில் முதல் முறையாக.. இந்தியா செய்த சம்பவம்.. பதறும் பாகிஸ்தான்.!! - Seithipunal
Seithipunal


இந்திய விமானப் படையின் சி-130 ஜே விமானம் இந்தியா பாக்கிஸ்தான் எல்லையான கார்கில் மலைப்பகுதியில் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கி சாதனை.! 


போர் காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு திடீர் தாக்குதல் நடத்த டெரெய்ன் மாஸ்கிங் தொழில்நுட்பம் பயன்படுத்தபடவுள்ளது. மலை பகுதியில் போர், இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட எத்தகைய சவாலான சூழ்நிலையிலும் திறம்பட செயல்பட இந்திய விமானப்படை தயார்  நிலையில் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் சி-130 ஜே விமானம் முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் மாவட்டத்தின் தலைநகரம் கார்கில். மலைகளால் சூழப்பட்டுள்ள பகுதி கடல் மட்டத்திலிருந்து 8,780 அடி உயரத்தில் அமைந்துள்ளது. உலகின் மிக உயரமான போர்க்களமாக இங்கு  குளிர் காலத்தில் வெப்பநிலை -20 டிகிரிக்கும் கீழ் செல்லும்.

இதுகுறித்து விமானப்படையின் எக்ஸ் சமூக வலைதளத்தில், “இந்திய விமானப்படையின் சி-130 ஜே விமானம் கார்கில் விமான தளத்தில் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கியது. விமானப்படையின் கருட் கமாண்டோ படையைச் சேர்ந்த வீரர்கள் பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு துல்லியமாக வழிகாட்டும் டெரெய்ன் மாஸ்கிங் 
 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சாதனையை படைத்தனர்” என பதிவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian air force c130j plane lands in kargil hills at night


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->